| 
 
1240. தழைமயி லேறவன் றாதையோதான்மழைபொழி சடையவன் மன்னுகாதில்
 குழையது விலங்கிய கோலமார்பின்
 இழையவ னிராமன தீச்சரமே. 3
 1241. சத்தியு ளாதியோர் தையல்பங்கன்முத்திய தாகிய மூர்த்தியோதான்
 அத்திய கையினி லழகுசூலம்
 வைத்தவ னிராமன தீச்சரமே. 4
 __________________________________________________ கு-ரை: தாழ்சடையன்,
விநாயகப்பெருமான் தாதை, பாடலன், அழகன் நகர் இது
என்கின்றது. சந்தம் - அழகு. தந்தமதத்தவன் -
தந்தத்தையும் மதத்தையும் உடைய
விநாயகப்பெருமான். அந்தம் இல் - எல்லையில்லாத. 3. பொ-ரை: தழைத்த பீலியோடு கூடிய
மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு
நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும்,
காதில் நிலைபெற்று விளங்கும் குழையை
அணிந்தவனும், அழகிய மார்பில் குறுக்காக
முப்புரிநூல் அணிந்தவனுமாகிய சிவபிரானது தலம்
இராமனதீச்சரம். கு-ரை: முருகன் தாதை, மார்பில்
பூணூலன் நகர் இதுவே என்கின்றது. தழை மயில் -
பீலியோடு கூடிய மயில். ஏறவன் - ஏறுதலையுடையவன்.
மழை - நீர்த்துளி. குழை - காதணி. கோலம் - அழகு. இழை
- பூணூல்; ஆபரணமும் ஆம். 4. பொ-ரை: சத்திகளில்
முதல்வியாக விளங்கும் உமையம்மையை ஒரு பாகமாகக்
கொண்டவனும், உயிர்கட்கு முத்திப்பேறாக
விளங்கும் கடவுளும், தீயேந்திய கையில் அழகிய
சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம்
இராமனதீச்சரம். கு-ரை: ஆதி சத்தியின் தலைவன்,
முத்திதரு முதல்வன் நகர் இது என்கின்றது. அத்தியகையினில் அழகு சூலம் வைத்தவன்
- சங்கார கிருத்தியஞ்செய்யும் தீயேந்திய
திருக்கரத்தில் அழகுக்காகச் சூலத்தை ஏந்தியவன்.
இதன் நயம் ஓர்க. |