* * * * * * 7 
1255. கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் 
கழலடிக்கே 
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் 
நாமடியோம் 
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் 
செய்தவரே 
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு 
நீலகண்டம். 8 
 
__________________________________________________ 
இல்லாத இத்தீவினைகள் தீண்டப்பெறா
திருநீல கண்டம் என்கின்றது. மனத்திற்கு இயற்கை,
பற்றியதை விட்டுப் பின் வேறொன்றைப் பற்றி,
அதன் மயமாய், பற்றியதையும் மறந்துவிடுதல். அந்த
நிலையை மாற்றி என்றார். வற்புறுத்தி -
திருவடியையே பற்றிவிடாது நிற்றலின் வினையின்
வழிநின்று மலமறைப்பால் தடுமாறும் ஆன்மாவை
வற்புறுத்தி சிறப்பில் இத்தீவினை - சிறப்பற்ற
இந்தத்தீவினை. 
7. * * * * * * * * 
8. பொ-ரை: நாம் சிவனுக்கு
அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக
வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண்
நல்லமலர்களைக் கொண்டு அருச்சித்துப்
போற்றித் ‘தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய
இராணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள்
செய்த பெருமானே! என உருகிப் போற்றுவோமாயின்
சிவனடிவழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப்
பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா.
இதுதிருநீலகண்டத்தின் மேல் ஆணை. 
கழலடிக்கே - கே - ஏழன் உருபு. திருவிலித்
தீவினை - சிவஞானச் செல்வத்தை இல்லதாக்கும்
தீவினை. 
கு-ரை: பிறவியை அறுத்து
உலகவாழ்க்கையை வெறுத்து உம் திருவடியை
உருகிவழிபடும் எம்மைத் தீவினை தீண்டப்பெறா
திருநீலகண்டம் என்கின்றது. கரு - பிறவிமுதல். செரு
இல் அரக்கன் - போரில்லாத
இராவணன்.திக்குவிஜயம்பண்ணிப்
போரில்லாமையால் தருக்கிக் கயிலையை
எடுத்தானாதலின் இங்ஙனம் கூறினார். திரு இல் -
சிவனடி வழிபடும் செல்வத்தையில்லாத. 
 |