| 
 
    1272. நோய்புல்கு தோறிரைய நரைவரு நுகருடம்பில் நீபுல்கு தோற்றமெல்லா நினையுள்கு மடநெஞ்சே வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப் பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே. 2 1273. துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால் இனியுறு பயனாத லிரண்டுற மனம்வையேல் கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும் பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே. 3 __________________________________________________  2. பொ-ரை: அறியமையுள் மூழ்கித் திளைக்கும்
நெஞ்சே! நீ போக நுகர்ச்சிக்குரிய இவ்வுடம்பில்
இளமை முதல் மாறிவரும் தோற்ற மெல்லாவற்றையும்,
நோய்கள் தழுவும் தோல் சுருங்கி நரை தோன்றும்
நிைலையையும் நினைந்து சிந்திப்பாயாக. மூப்பு
வருமுன் வாய் நிறைந்த தோத்திரங்களைப் பாடி,
வலம் வந்து, தலையால்வணங்கிப் பாயும் புலியி்ன்
தோலை உடுத்த பெருமான் எழுந்தருளிய
திருப்பருப்பதத்தைப் பரவுவோம்; வருக. கு-ரை: நெஞ்சே! தோல் திரங்கி,
நரைத்துப் போகும் உனது தோற்றம் எல்லாவற்றையும்
கொஞ்சம் நினைத்துப்பார், வாய் நிறைந்த
தோத்திரத்தால் வலஞ்செய்து வணங்கிச்
சீபருப்பதத்தைப் பரவுவோம் வா என்கின்றது. புல்கு
- தழுவிய. திரைய - சுருங்க. நினை உள்கு -
நினைத்துப்பார் சிந்தித்துப்பார். புல்கு -
நிறைந்த. 3. பொ-ரை: நெஞ்சே! வருத்தத்தைத்
தரும் பிறவித் துயர்தீரத் தோன்றிய நீ, நல்
வினைகள் செய்து அப்புண்ணியத்தால் தேவர் உலக
இன்பங்களை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை
எய்துதல் |