பக்கம் எண் :

 125. திருச்சிவபுரம்1153


125. திருச்சிவபுரம்

பதிக வரலாறு:

21-ஆம் பதிகம் பார்க்க.

திருவிராகம்
பண்: வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 125

திருச்சிற்றம்பலம்

1348. கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர்கெடுமே. 1

1349. படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரிகொளுவிய சிவனவ னுறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுர மடையநம்
இடர்கொடு முயர்கதி பெறுவது திடனே. 2

_________________________________________________

1. பொ-ரை: மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திருவுருவினனும், அதனால் ஒரு கூற்றில் நகில் தோன்றும் திருவுருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கருங்கற்களால் இயன்ற மதில்களால் பொதியப் பட்டுள்ள சிவபுர நகரைத் தொழுதால் நம்மை நலியும் வினைகள் இல்லை. இருமையிலும் இடர்கெடும்.

கு-ரை: தனது திருமேனியிலேயே உமையையும் உடையவன்; அதனால் ஒருபாகத்தை முலைவிளங்கும் உருவமுடையவன்; அவனது சிவபுரநகரைத் தொழ வருத்தும்வினை இல்லை; இருமையும் இடர்கெடும் என்கின்றது. கலை - ஆடை, அரிவை - உமாதேவி. நலிவினை இலை இடர் இருமையும் கெடும் எனக் கூட்டுக.

2. பொ-ரை: ஒளி விரிந்த சடையினனும், விடை ஊர்தியனும் அசுரர்களின் மும்மதில்களை விளங்கும் எரிகொள்ளுமாறு செய் தழித்தவனுமாகிய சிவன் உறையும் பதி ஆகிய, இடையிடையே