பக்கம் எண் :

 127. திருப்பிரமபுரம்1171


127. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

(117-ஆம் பதிகம் பார்க்க)

ஏகபாதம்
பண்: வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 127

திருச்சிற்றம்பலம்

1370. பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான். 1

1371. விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் 2

_________________________________________________

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

1. கு-ரை: ஞானாகாசமாகிய பராசத்தியான பரிபூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசத்திக்கு அதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு இறுதி காணப்படாத வஸ்து எந்தப் பெரியோன். மேல்நிலமாகிய ஆகாசத்தின்கண்ணே யோடா நின்ற கங்காதேவியை விரும்பித் திருமுடியிலே வைத்தவன், எம்மை நீங்காத நிலைமையையுடைய எமது உயிர். பிரமரூபத்திலே எண்ணப்பட்ட என்னை முத்தியிலே விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவனாய் என்னை ஒக்கவந்தவன். பிரமபுரம் என்கின்ற சீகாழிப்பதியிலே வீற்றிராநின்ற கர்த்தாவானவன் என்னுடைய சுவாமி. பெரியோனும் எனக்கு உயிரானவனும் என்னை யொக்கவந்தவனும் சீகாழிப்பதியில் வீற்றிருக்கும் கடவுள் எனக் கூட்டிப் பொருள் கொள்க.

2. கு-ரை: அஷ்டகுல பர்வதங்களும் ஒலிசிறந்த தரிசு மணியாகவும், அகில லோகங்களையும் உள்ளே அகப்படுத்தும் தன்மைய