பக்கம் எண் :

1198திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


130. திருவையாறு

பதிக வரலாறு:

திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கின்ற முக்கட்பரமேட்டியைத் தொழுது, அங்கிருந்து, பிள்ளையார் ஐயாறு சென்றடைந்தார்கள். ஐயாற்று அடியார்கள் அனைவரும் ‘சிவஞானத் தெள்ளமுது உண்ட திருஞான சம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளினர்‘ என்று ஊரை அலங்கரித்தனர். மனக்களிப்போடு எதிர்கொண்டு அழைத்தனர். நந்தி அருள் பெற்ற நன்னகராகிய ஐயாற்றை முதற்கண் வணங்கிப் புலனைந்தும் நிலை கலங்குமிடத்து அஞ்சல் என்பார்தம் ஐயாறு என்று சிறப்பிக்கும் இப்பதிகத்தைப் பாடியருளினர். இதனைச் சேக்கிழார் பெருமான் ‘புந்திநிறை செந்தமிழின் சந்த இசை‘ என வாயாரப் போற்றுவார்கள்.

பண்: மேகராகக்குறிஞ்சி

பதிக எண்: 130

திருச்சிற்றம்பலம்

1394. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி

யறிவழிந்திட் டைம்மேலுந்தி

அலமந்த போதாக வஞ்சேலென்

றருள்செய்வா னமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட

முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி யலமந்து மரமேறி

முகில்பார்க்குந் திருவையாறே. 1

_________________________________________________

1. பொ-ரை: ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து, ‘அஞ்சேல்‘ என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில்