பக்கம் எண் :

 131. திருமுதுகுன்றம்1211


1412. கதிரொளிய நெடுமுடிபத் துடையகட

லிலங்கையர்கோன் கண்ணும்வாயும்

பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை

மலையைநிலை பெயர்த்தஞான்று

மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்

றூன்றிமறை பாடவாங்கே

முதிரொளிய சுடர்நெடுவாண் முன்னீந்தான்

வாய்ந்தபதி முதுகுன்றமே. 8

1413. பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்

பூந்துழாய் புனைந்தமாலும்

ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்

துறநாடி யுண்மைகாணாத்

__________________________________________________

அருளிச்செய்து, தேவர் வேண்டுகோட்கிரங்கிப் பிரமன் சிரங்கொய்த நிமலர் கோயில், குறச்சிறுமியர் முறத்தால் முத்தைக் கொழித்துச் சிற்றுலையிற் கொட்டும் முதுகுன்றம் என்கின்றது. தரளம் - முத்து. மணி - மாணிக்கங்கள்.

8. பொ-ரை: கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும், வாயும், ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாய மலையை நிலைபெயர்த்த காலத்து, மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு, மலர்போன்ற தன் திருவடி ஒன்றை ஊன்றி அவ் இராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத் தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: இராவணனுக்கு மறக்கருணையும் அறக்கருணையும் காட்டியாட்கொண்டவனிடம் முதுகுன்றம் என்கின்றது. அளகைக்கு இறை முரல - குபேரன் தன் பகைவனாகிப் புஷ்பக விமானத்தைக் கவர்ந்த இராவணன் ஒழிந்தான் என்று மகிழ்ச்சி ஒலிக்க.

9. பொ-ரை: தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும், அழகிய துளசிமாலை அணிந்த திருமாலும், அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வ ஒளி