| 
 134. திருப்பறியலூர்வீரட்டம் பதிக வரலாறு: திருச்செம்பொன்பள்ளி திருவிளநகர்
முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு, பிள்ளையார்
பரமர்தம் திருப்பறியலூரைப் பரவி, இப்பதிகத்தை
அருளிச்செய்தார்கள். பண்: மேகராகக்குறிஞ்சி பதிக எண்: 134 திருச்சிற்றம்பலம் 
1437. கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்நிருத்தன் சடைமே னிரம்பா மதியன்
 திருத்த முடையார் திருப்பறி யலூரில்
 விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே. 1
 1438. மருந்த னமுதன் மயானத்துண் மைந்தன்பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
 திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
 விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே. 2
 _________________________________________________ 1. பொ-ரை: திருந்திய
மனமுடையவர்கள் வாழும் திருப்பறியலூரில்
தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து
இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக
இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன்.
சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.  கு-ரை: இப்பதிகம் முழுவதும்
எல்லாவுயிர்கட்கும் கருத்தனாய், கடவுளாய்,
விருத்தனாய் இருப்பவன் திருப்பறியலூர் வீரட்டத்
தான் என இறைவனியல்பு அறிவிக்கின்றது. திருத்தம்
உடையார் - பிழையொடு பொருந்தாதே திருந்திய
மனமுடைய அடியார் விருத்தன் - தொன்மையானவன். 2. பொ-ரை: ஒழுக்கத்திற் சிறந்த
அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச்
சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும்
வீரட்டானத்து இறைவன், பிணிதீர்க்கும்
மருந்தாவான். உயிர் காக்கும் |