பக்கம் எண் :

 ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை27


திருவாவடுதுறையிலும், கி.பி. 911இல் அல்லூரிலும், கி.பி.914இல் திருத்தவத்துறையிலும் (லால்குடி), திருமுறைகளை ஓத நிவந்தம் அளித்தமை அவ்வூர்க் கோயில் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

உத்தம சோழன் ஆட்சியில் கி.பி. 977இல் திருநல்லத்திலும், (கோனேரி இராஜபுரம்) கி.பி. 984இல் அந்துவநல்லூரிலும் திருப்பதிகங்கள் ஓதுவதற்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பல்லவர் ஆட்சியில் நந்திவர்ம பல்லவனின் 17ஆம் ஆட்சி ஆண்டாகிய கி.பி. 750இல் திருவல்லம் கோயில் கல்வெட்டில் "திருப்பள்ளித் தாமம் பறிப்பார்க்கும், திருப்பதிகங்கள் ஓதுவார் உள்ளிட்ட பல பணிகள் செய்வார்க்கும் நெல்லுநானூற்றுக்காடியும்" என்று குறிக்கப்படுகிறது. இதைப் பார்க்கும்போது ஆதித்த சோழனுக்கு முன்பே பல்லவர் ஆட்சியிலேயே திருமுறைகளைக் கோயில்களில் ஒதுவதற்கு நிவந்தங்கள் அளித்த உண்மை புலனாகிறது.

இவையெல்லாம் முதலாம் இராஜராஜன் காலத்திற்கு (கி.பி. 985-1014) முன்பே நிகழ்ந்தவை. எனவே திருமுறை கண்ட சோழன் முதலாம் ஆதித்தனா, முதலாம் இராஜராஜனா என்பதில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.

கல்வெட்டு ஆய்வாளர் திரு.சதாசிவ பண்டாரத்தார் முதலாம் ஆதித்த சோழன் காலமே நம்பியாண்டார் நம்பிகளின் காலம் என்பர். திருமுறை கண்டதும் அக்காலமே என்பர். திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் திரு.க.வெள்ளைவாரணனாரும் அக்கருத்தையே வலியுறுத்துகின்றார்.

கல்வெட்டு ஆய்வாளர், குடந்தை திரு.ந.சேதுராமன் முதலியோர் முதலாம் இராஜராஜனே என்பர். உமாபதிசிவம் இயற்றியருளிய திருமுறைகண்ட புராணம் இராஜராஜனையே திருமுறைகண்ட சோழன் என்று குறிப்பிடுகின்றது.

சோழர் மூவரின் திருமுறைப்பணி:

நம்பியாண்டார் நம்பிகள், முதலாம் இராஜராஜன் காலத்திலும், முதலாம் இராஜேந்திரன் காலத்திலும் இருந்தவராகக் கருதப்படுவதால், இராஜராஜன் காலத்தில் முதல் ஏழு திருமுறைகளையும், இராஜேந்திரன் காலத்தில் எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாந்