பக்கம் எண் :

 5. கீழைத்திருக்காட்டுப்பள்ளி297


5. கீழைத்திருக்காட்டுப்பள்ளி

பதிக வரலாறு:

திருவெண்காடு முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழியை வந்தடைந்த பிள்ளையார், கீழ்ப்பாலுள்ள தலங்களாகிய மயேந்திரப்பள்ளி, குருகாவூர் முதலியவற்றையும் வணங்கத் திருவுளங் கொண்டெழுந்தருளியபோது, தென் கீழ்த் திசையிலுள்ள காழிநகருக்கு 12 - கி.மீ. தொலைவில் உள்ள கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடைந்து வணங்கினார்கள்: வணங்கிய சுவாமிகள் ‘செய்யருகே‘ என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்கிறார்கள்.

பண்: நட்டபாடை

பதிக எண்: 5

திருச்சிற்றம்பலம்

45. செய்யரு கேபுனல் பாயவோங்கிச்

செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்

கையரு கேகனி வாழையீன்று

கானலெல் லாங்கமழ் காட்டுப்பள்ளிப்

பையரு கேயழல் வாயவைவாய்ப்

பாம்பணை யான்பணைத் தோளிபாகம்

மெய்யரு கேயுடை யானையுள்கி

விண்டவ ரேறுவர் மேலுலகே. 1

__________________________________________________

1. பொ-ரை: வயலின்கண் நீர் பாய, அதனால் களித்த செங்கயல்மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும், காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழ மணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள், நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும்