| 
 
    57. தோலொடு நூலிழை
    சேர்ந்தமார்பர் தொகுமறை
    யோர்கள் வளர்த்தசெந்தீ மால்புகை
    போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய
    மைந்தசொல்லாய் சேல்புல்கு
    தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங்
    காட்டங் குடியதனுள் கால்புல்கு பைங்கழ
    லார்க்கவாடுங் கணபதி யீச்சரங்
    காமுறவே. 3 58. நாமரு
    கேள்வியர் வேள்வியோவா நான்மறை
    யோர்வழி பாடுசெய்ய மாமரு வும்மணிக்
    கோயின்மேய மருகல் நிலாவிய
    மைந்தசொல்லாய் __________________________________________________ காக்க வேண்டியது
மரபாதலின் மூ எரிகாவல் ஓம்பும் மறையாளர்
என்றார். நேர் - நேர்மை. புரிநூல் - மூன்று
புரியாகத் திரிக்கப்பெற்ற பூணூல். மை - மேகம். கை
தவழ் - திருக்கரத்தில் திகழ்கின்ற. கூர் எரி -
மிக்க தீ. 3. பொ-ரை: மான்
தோலோடு கூடிய முப்புரி நூல் அணிந்த
மார்பினராய்த் திரளாய்நின்று வேதம் வல்ல
அந்தணர்கள் வளர்த்த செந்தீயீலிருந்து எழுந்த
கரிய புகை போய் மிகவும் மிகுதியாக வெளிப்படும்
மாடங்களோடு கூடிய வீதிகளை உடைய திருமருகலில்
விளங்கும் இறைவனே, சேல்கள் நிறைந்த குளிர்ந்த
வயல்களை அடுத்த சோலைகளால் சூழப்பட்ட
சிறப்புமிக்க திருச்செங்காட்டங் குடியில்
காலில் கட்டிய கழல்கள் ஆர்க்க ஆடிக்
கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் என்ன?
சொல்வாயாக. கு-ரை: இது, யாகப்புகை
விம்முகிற மருகலிலுள்ள தேவனை, குளிர்ந்த வயலும்
சோலையும் சூழ்ந்த செங்காட்டங்குடியை
விரும்புவதேன் என்று வினாவுகிறது. தோல் -
கிருஷ்ணாஜினம் என்னும் மான்தோல். மால் புகை -
கரிய புகை. சேல் புல்கு - சேல்மீன்கள் தழுவிய. கால்
- திருவடி. 4. பொ-ரை: நாவிற்
பொருந்தியவாய்ப் பயிலப்பட்டுவரும் வேதங்களை
ஓதி உணர்ந்தவர்களும், வேள்விகளை இடைவிடாமல் |