திருத்தொண்டர்
புராணம்
திருஞானசம்பந்தர் புராணம்
    நீடுதிருத் தொண்டர்புடை சூழ
    அங்கண்
    நித்திலயா னத்திடைநின்
    றிழிந்து சென்று
    பீடுடைய திருவாயில்
    பணிந்து புக்குப்
    பிறையணிந்த சென்னியார்
    மன்னுங் கோயில்,
    மாடுவலங் கொண்டுள்ளால்
    மகிழ்ந்து புக்கு
    மலர்க்கரங்கள்
    குவித்திறைஞ்சி வள்ள லாரைப்
    பாடகமெல் லடிஎடுத்துப் பாடி
    நின்று
    பரவினார் கண்ணருவி
    பரந்து பாய.
    
        
    -
                                சேக்கிழார்.