பக்கம் எண் :

 8. திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்333


கண்டல்கண் மிண்டிய கானற்காழிக்

கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன

கொண்டினி தாவிசை பாடியாடிக்

கூடும வருடை யார்கள்வானே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள், வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர்.

கு-ரை: திசையிலுள்ளார் அனைவரும் வணங்கும் பெருமானை ஆவூரில் வழிவழி உரிமைபூண்ட சில அடியார்கள் போற்றுகின்றார்கள் என்பதாம். கண்டல் - தாழை, சொன்ன - சொல்லினவாய பாடல்கள். பாடி - வாய்த்தொண்டு. ஆடி - மெய்த்தொண்டு. கூடுதல் - சிந்தைத்தொண்டு. கூடுமவர் - தியானிப்பவர்.

நல்லூர்ப் புராணம்

கோழி வந்த கொடியவன் தாதையை
வாழி வந்தனை செய்து வழுத்திடும்
ஆழி வந்த வமுதை நிகர்கவிக்
காழி வந்த கவுணியன் போற்றுவாம்.

- வேலைய தேசிகர்.

காசி காண்டம்

கேழ்கிளர் புனிற்றுத் திங்கள் கிடந்தொளிர் சடையோன் பங்கில்
தாழிருங் கூந்தற் பேதை தடமுலைத் தீம்பால் மாந்தி
யேழ்நிலை வரைப்பு முய்ய வீர்ந்தமிழ் மாரி பெய்த
காழிமா முகிலின் செய்ய மலரடி கருத்துள் வைப்பாம்.

- அதிவீரராம பாண்டியன்.