| 
 
    95. மாசேறிய
    வுடலாரமண் குழுக்கள்ளொடு
    தேரர் தேசேறிய
    பாதம்வணங் காமைத்தெரி
    யானூர் தூசேறிய வல்குற்றுடி யிடையார்துணை
    முலையார் வீசேறிய
    புருவத்தவர் வேணுபுர மதுவே. 10 __________________________________________________ தலையோட்டினை
ஏந்தியவனுமாகிய சிவபிரானது ஊர்; ஆழ்ந்த நீர்
நிலைகளில் வாழும் சங்குகள், கடல் தரும்
உப்பங்கழியை விடுத்துச் செந்நெல் விளைந்த
அகன்ற வயலில் வந்து உறங்கும் வேணுபுரமாகும். கு-ரை: வயம் - வையம் -
போலி. வயம் உண் தவம் மாலும் - உலகை உண்ட
தவத்தைச் செய்த திருமாலும். அடிகாணாது அலமாக்கும்
- திருவடியைக் காணப் பெறாது சுழலும். அலமாக்கும்
பரன் எனவும் ஏந்திய பரன் எனவும் தனித்தனியே
கூட்டுக. பயன் ஆகிய பிரமன் - அச்சத்தை
உடையவனாகிய பிரமன். கயம் - ஆழ்ந்த நீர்நிலை.
சங்கம் உப்பங்கழியைவிட்டுச் செந்நெல் வயலில்
வந்து உறங்கும் வேணுபுரம். செந்நெல்வியன் -
செந்நெல் விளைந்துள்ள அகன்ற இடம். 10. பொ-ரை:
அழுக்கேறிய உடலினை உடையவர்களாகிய சமணர்
கூட்டத்தினரோடு, புத்த மதத்தினராகிய தேரர்களும்
ஒளி பொருந்திய திருவடிகளை வணங்காமையால்
அவர்களால் அறியப் பெறாத சிவபிரானது ஊர்; அழகிய
ஆடை தோயும் அல்குலையும், உடுக்கை போன்ற
இடையையும், பருத்த தனங்களையும், ஆடவர் மேல் தம்
குறிப்பு உணர்த்தி நெரியும் புருவங்களையும் உடைய
அழகிய மகளிர் வாழும் வேணுபுரம் ஆகும். கு-ரை: மாசு ஏறிய உடல்
- தேயாது தோய்வதால் அழுக்கு ஏறிய உடல். தேரர் -
புத்த முனிவர். தேசு ஏறிய பாதம் - ஒளியுள்ள திருவடி.
வணங்காமைத் தெரியான் - வணங்காதபடி அவர்களால்
அறியமுடியாதவன். தூசு - ஆடை. துடி - உடுக்கை. வீசு ஏறிய
புருவத்தவர் - ஆடவர்மேல் வீசி நெற்றியின்கண்
ஏறிய புருவத்தினை உடையார். |