| 
 
    98. தேமாங்கனி
    கடுவன்கொள விடுகொம்பொடு
    தீண்டித் தூமாமழை
    துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற ஆமாம்பிணை
    யணையும்பொழி லண்ணாமலை யண்ணல் பூமாங்கழல்
    புனைசேவடி நினைவார்வினை
    யிலரே. 2 99. பீலிம்மயில்
    பெடையோடுறை பொழில்சூழ்கழை
    முத்தம் சூலிம்மணி
    தரைமேனிறை சொரியும்விரி
    சாரல் __________________________________________________ உமாதேவியை
இடப்பாகத்திருத்தி இருக்கிற உடனாய நிலையை
உணர்த்தியது. பெண்ணாகிய பெருமான் என்றது
உமையம்மையோடு ஒன்றாகிய நிலையை உணர்த்தியது.
மழலை முழவு - சொற்றூய்மையில்லாத முழவொலி. சொல்
- மத்தளத்தின் ஜதி ஒலி. 2. பொ-ரை: கிளைகளை
வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள்
விடுத்த அக்கொம்புகள் வேகமாகத்
தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப்
பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச்
சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக் கருதி
மரநிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை
இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல்
அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை
இலராவர். கு-ரை: கடுவன் -
ஆண்குரங்கு. விடுகொம்பு - மாம்பழத்தைப்
பறித்துவிட்ட மாங்கொம்பு. தூ மா மழை - தூய்மையான
கரிய மேகம். துறுகல் - பாறை. ஆமா பிணை - காட்டுப்
பசு; பெண்பசுவோடு, ஆமாப் பிணை என்பது
எதுகைநோக்கி ஆமாம்பிணையாயிற்று, பூமாங்கழல் -
அழகிய மாவிலையின் வடிவந்தோன்றப் புனையப்பட்ட
காலணி. மாண் கழலுமாம். நினைக்க முத்தி தரும் தலம்
ஆதலின் நினைவார் வினையிலரே என்றார். 3. பொ-ரை:
தோகைகளோடு கூடிய ஆண்மயில்கள் பெண் மயில்களோடு
உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் |