118. வீழிம்மிழ
லைம்மேவிய
விகிர்தன்றனை
விரைசேர்
காழிந்நகர்
கலைஞானசம்
பந்தன்றமிழ்
பத்தும்
யாழின்னிசை
வல்லார்சொலக்
கேட்டாரவ
ரெல்லாம்
ஊழின்மலி
வினைபோயிட
வுயர்வானடை வாரே.
11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
விண்ணளவும் ஓங்கி
வளர்ந்து பொலிவு செய்யும் என்று உரைத்தருளியதால்
இன்றும் அச்சிறப்பிற் குன்றாது ஒளிர்கின்றது.
11. பொ-ரை:
வீழிமிழலையுள் எழுந்தருளிய விகிர்தனாகிய
இறைவனைப்பற்றி மணம் பொருந்திய சீகாழிப்
பதியில் தோன்றிய கலைவல்ல ஞானசம்பந்தன்
பாடியருளிய பாடல்கள் பத்தினையும் யாழிசையில்
பாட வல்லார்களும் சொல்லக் கேட்டார்களும் ஆகிய
அனைவரும் ஊழாக அமைந்த வினைகள் நீங்கச்
சிவப்பேறு எய்துவர்.
கு-ரை: ஊழின் மலி
வினை - முறைமையானிறைந்த வினை; அதாவது
இன்னதன்பின் இன்னது நுகர்ச்சிக்கு உரியது என
நியதி தத்துவத்தான் வரையறுக்கப்பெற்ற வினை.
இத்திருப்பதிகத்தை
யாழிசை வல்லவர் பாடக்கேட்டுச் சிவ பக்தியுடன்
வழிபட்டவர் எல்லாரும் ஊழ்வினை ஒழியவும்
வீட்டுலகம் எய்தவும் பெறுவர் என்றதால், தேவாரத்
திருப்பதிகங்களை இசையுடன் பாடல் வேண்டும்
என்பதும் அது பத்தியை விளைத்துப் பேரின்ப
வீட்டை அருளும் என்பதும் புலனாகும். யாழின் இசை
என்றும், யாழ் இன்னிசை என்றும் பிரிக்கலாம்.
ஊழின்மலி வினை போயிடல் - பாசநீக்கம். உயர்
வானடைதல் - சிவப்பேறு.
|