| 
 
 
  சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந் துறையானவ னறையார்கழல் தொழுமின்துதி செய்தே. 3 166. தணியார்மதி யரவின்னொடு வைத்தானிட மொய்த்தெம் பணியாயவ னடியார்தொழு தேத்தும்புள மங்கை மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும் அணியார்மண லணைகாவிரி யாலந்துறை யதுவே. 4 __________________________________________________ குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட
வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட ஆலந்துறையிலுள்ள
புள்ளமங்கை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச்
சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக. கு-ரை: கறை - விடம். மிடறு - கழுத்து.
பொறையார்தரு - சுமையாகப் பொருந்திய. நறை -
மணம். 4. பொ-ரை: தண்ணிய பிறைமதியைப்
பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம்,
அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது
ஏத்துவதும், மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும்,
அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும்
காவிரியின் தென்கரையிலுள்ளதுமான ஆலந்துறையில்
அமைந்த புள்ளமங்கையாகும். கு-ரை: தணி ஆர் மதி - குளிர்ந்தபிறை.
இகரம் சாரியை. எம் பணி ஆயவன் - எமது தொண்டு
விளங்குதற்கு இடமாயவன். எம்மைப் பணிகொள்ளும்
தலைவனானவன் என்பாரும் உண்டு. பொன்னும் மணியும் முதலாயின மணலில்
அணையும் காவிரி என்றது ஓடும் பொன்னும் ஒக்கநோக்கும்
இயல்பு காவிரிக்கு உண்டென்பதால் அடியாரியல்பு
விளக்கியவாறு. |