இருவர்க ளுடல்பொறை யொடுதிரி
யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன்
மறைவன மமர்தரு பரமனே. 7
__________________________________________________
ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட
இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும்
அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு
எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன்
எனத்திரியும் அழகுடையவன், வண்ண மலர்க்
கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம்
அமரும் பரமன் ஆவான்.
கு-ரை: இது ஐம்பெரும் பூதங்களும்
ஒன்றினொன்று ஒடுங்க, இறுதியில் மால் அயன்
இவர்களுடைய உடற்பொறையோடு திரிகின்ற இறைவன்,
மறைவனநாதன் என்கின்றது. நிலன் நீரில்
ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி
வளியில் ஒடுங்க வளி ஆகாயத்தில் ஒடுங்க அப்போது
மாலயன் இருவரும் அழிய, அவர்கள் எலும்பை
அணிந்து, தான் ஒருவனே தலைவன் என்பதை
உணர்த்தித் திரிபவன் என்பதையும், இத்தகைய
சங்காரகாரணனையே உலகு முதலாகவுடையது என்பதையும்
உணர்த்தி நிற்பன் என்பதாம். இனமலர் -
கூட்டமான மலர், அறுபதம் - வண்டு. இது ஒடுக்க
முறை கூறியது.
இதனால் மண் முதலிய பூதங்கள்
ஒன்றினொன்று தோன்றும் என்பது பெறப்படுகிறது.
இதனையே உட்கொண்டு இப்பாடலும் ஒடுக்கமுறை கூறுகிறது.
இது காரியத்தின் குணம் காரணத்தினும் உண்டென்பது
நியமமாகலின் புடவிக்குரிய ஐந்து குணங்களும்
அதற்குக் காரணமென்ற புனலுக்கும் உளவாதல் வேண்டும்.
அங்ஙனமே ஏனைய பூதங்கட்கும், அஃதின்மையின்
ஒரு பூதம் மற்றொரு பூதத்திற்குக் காரணமாகாது
பஞ்சதன்மாத்திரைகளே காரணமாகும் என்பது
சைவசித்தாந்தத் துணிபு. அதனோடு ஒடுக்கமுறை
கூறும் இச்செய்யுள் முரணுமெனின், முரணாது.
மாதவச் சிவஞான யோகிகள் மாபாடியத்து
இச்செய்யுளை எடுத்துக்காட்டிக் கூறுவது:
"அற்றேல், வேதத்துள் அங்ஙனம்1
ஒன்றினொன்று தோன்று" மென்ற
வாக்கியத்தோடும், "இருநில னதுபுன லிடை மடி
தரவெளி புகவெரி யதுமிகு - பெருவெளியினிலவி தரவளி
கெடவிய
__________________________________________________
1இதனை
"நாகாசாத் ஜாயதே வாயுர் நவாயோ ரக்னி ஸம்பவ:
நாக்னொராபஸ்த: ப்ருத்வீதர்மாதி சயதர்ச
நாத்" "காரணாத்குண சங்க்ராந்திர்யுக்தா
கார்யெஷுநஸ்வத: "வ்யோம்ந: பஞ்ச
குணத்வம் ஸ்யாத் ததா ஸ்ருஷ்டி க்ரமோ
|