பக்கம் எண் :

463திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


24. சீகாழி

பண் : தக்கராகம்

பதிக எண்: 24

திருச்சிற்றம்பலம்

250. பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே. 1

251. எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்ட மாடும் மடிகளே. 2

__________________________________________________

1. பொ-ரை: பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப் பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார்.

கு-ரை: இது பாக்களின் சொற்பொருளாய்ப் பயிலும் பரமர் திரிபுரம் எரித்த சீகாழியார் போலும் என்கின்றது. புரிபுன் சடை - புரியாக முறுக்கேறிய புல்லிய சடை. ஏத்தும் - மக்களாலும் தேவர்களாலும் ஏத்தப்படுகின்ற. மேவார் - பகைவர்களாகிய திரிபுராதிகள். பாவார் இன் சொல் - பாக்களில் நிறைந்த இனியசொல், பயிலுதல் - சொற்கள் தோறும் பொருளாய் அமைதல்.

2. பொ-ரை: அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட் புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.

கு-ரை: அந்திக்காலத்து நடமாடும் அடிகளே மாலையுஞ் சாந்துங் கொண்டு தேவர்கள் வழிபடும் காழியார்போலாம் என்