| 
 சந்தம் பரவு ஞான சம்பந்தன்வந்த வாறே புனைதல் வழிபாடே. 11
 திருச்சிற்றம்பலம் __________________________________________________ ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத்
தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம்
செய்யும் வழிபாடாகும். கு-ரை:  அடியாராகவுள்ளீர்! சோற்றுத்துறை
ஆதியைத் தியானியுங்கள்; அதற்குரிய வழிபாடாவது
ஞானசம்பந்தன் திருவுளத்து வந்தவாறு அமைந்த இப்பதிகத்தைப்
பாடிப் புனைதலே என்பது. வந்தவாறே என்றது, இவை
இறைவன் திருவுள்ளத்து நின்று உணர்த்த எழுந்த உரைகள்
என்பதை விளக்கியது. 
  
  
    | ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
       ஒளிறு
      மணிப்பணி நாட்டும் உலகத்தும்உம் பருள்ளும்வெளிறு படர்ச்சில நிற்பதுண்டே மிண்டி மீன்உகளும்
 அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்
 களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடுங் கவிதைகளே.
 கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம்
 நவிக்கட் சிறுமியர் முற்றில் முகந்துதஞ்
      சிற்றில்தொறும்
 குவிக்கத் திரைபரக்
      குங்கொச்சை நாதன் குரைகழலே.
  -
      நம்பியாண்டார் நம்பி |  |