306. காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை யொளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 2
307. கல்வி யாளர் கனகம் மழன்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கட் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
3
308. நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல வடிக ளிடமாகும்
__________________________________________________
2. பொ-ரை: நெஞ்சே! காட்டின்கண்
முனிவர் குடில்களிலும், நாட்டின்கண் இல்லறத்தார்
வீடுகளிலும் விரும்பிப் பலியேற்று, ஓடி வரும் கங்கை
தங்கிய ஒளிவீசும் சிவந்த சடைகள் தாழ, தம் உடல்களை
விடுத்து, முத்திப்பேற்றை அடைய விரும்பும் அந்தணர்
வாழும் நறையூரில், புகழால் நீடிய சித்தீச்சரத்தில்
விளங்கும் பெருமானை நினைவாயாக.
கு-ரை: காடும் நாடும் கலக்க - காட்டிடமும்,
நாடும் தம்முட் கலக்க. ஆகம் வீடும் மறையோர் எனக்கூட்டி
வினைவயத்தான் வந்த உடலைவிட்டு முத்தியெய்தும்
அந்தணர் எனப் பொருள் கொள்க.
3. பொ-ரை: நெஞ்சமே! பொன்னையும்
தீயையும் ஒத்த திருமேனியராய், கங்கை தங்கும் முறுக்கேறிய
சிவந்த சடையினை உடையவராய் விளங்கும் சிவபிரானது
ஊர், கல்வியாளர் நிறைந்ததாய், திங்கள் தங்கும்
பொழில்கள் சூழ்ந்ததாய் விளங்கும் நறையூராகும்
அவ்வூரில் செல்வர் வணங்கும் சித்தீச்சரத்தைச்
சென்றடைவாயாக.
கு-ரை: கனகம் அழன்மேனி - பொன்னையும்
தீயையும் ஒத்த திருமேனி. கல்வியாளர் மல்கும்
நறையூர் என இயைக்க.
4. பொ-ரை: நெஞ்சே! மேல்நோக்கிய
நீண்டு வளரவல்ல செஞ்சடைகள் தாழுமாறு ஆடுதலில் வல்ல
அடிகளாகிய சிவபிரானது இடம் ஆகிய பாடுதலில் வல்ல
வண்டுகள் நிறைந்து வாழும் சோலைவளம்
|