பக்கம் எண் :

516திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

கு-ரை: கண்ணார் - இடமகன்ற. எண்ணார்புகழ் - எண்ணத்தைப் பொருந்திய புகழ். வீற்றிருப்பார் - பிறதேவர்க்கில்லாத பெருமையோடு இருப்பார்கள்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

ஓங்குதிருப் பதிகம்ஓ டேகலன்என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனைஆ ளுடையபிரான் இடைமருதீ தோஎன்று
பாங்குடைய இன்னிசையாற் பாடி எழுந்தருளினார்.

அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார் முதற்கோயில் முன்இறைஞ்சி
படியில்வலங் கொண்டுதிரு முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு நிறைகண்ணீர் நிரந்திழிய.

பரவுறுசெந் தமிழ்ப்பதிகம் பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பலபாடி வெண்மதியோ(டு)
அரவுசடைக் கணிந்தவர்தந் தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்.

- சேக்கிழார்.