பக்கம் எண் :

518திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே. 2

351. ஊரும் மரவஞ் சடைமே லுறவைத்துப்
பாரும் பலிகொண் டொலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோ
டாரும் புனலன் பிலாலந் துறையாரே. 3

352. பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண் டெழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியரோ தவொலிசென்
றறையும் புனலன் பிலாலந் துறையாரே. 4

__________________________________________________

ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.

கு-ரை: இது கிளிகள் வேத இசையைச் சொல்லும் ஆலந்துறை இறைவனே எந்தை விமலன் என்கின்றது. சதுரன் - சாமர்த்தியமுடையவன். கிடை ஆர் ஒலி - மாணவர்கள் கூட்டமாயிருந்து ஒலிக்கும் வேத ஒலி. இதனைச் சந்தைகூறுதல் என்ப. ஓத்து அரவத்துஇசை கிள்ளை - வேத ஒலியை இசைக்கின்ற கிளி. அடை ஆர் பொழில் - அடைதல் பொருந்திய சோலை.

3. பொ-ரை: ஊர்ந்து செல்லும் பாம்பைச் சடைமுடிமேல் பொருந்த அணிந்து உலகம் முழுதும் சென்று பலியேற்று, இசை பாடி மகிழும் பரமராகிய பெருமானார், நீரின்வழி உணவுண்ணும் கயல் மீன்களை வயல்களிடத்துள்ள வாளை வரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல்வளம் மிக்க அன்பிலாலந்துறையாராவார்.

கு-ரை: இது பலிகொள்ளும் பரமர் அன்பிலாலந்துறையார் என்கின்றது. அடியார்களது ஓடும் மனத்தை ஓரிடத்து நிறுத்தி வைப்பதுபோல ஊரும் பாம்பைச் சடைமேல் உறவைத்தார் என்ற நயம் உணர்க.

4. பொ-ரை: பிறைமதி, பாம்பு ஆகியவற்றைப் பகை நீக்கி ஒருங்கே பொருந்த வைத்த முடிமீது, நறுமணத்துடன் தோன்றும் வன்னித் தளிர்களும் மன்னிய சடையினர், வேதியர் பலர் வேதங்களை