பக்கம் எண் :

 36. திருவையாறு535


மதியின் னொடுசேர்கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. 2

384. கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே. 3

385. சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண்டவர்கா தல்செங்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே. 4

__________________________________________________

வாழுமிடம், மதியோடு சேரும் கொடிகளைக் கொண்டதும் மதி தங்குமாறு உயர்ந்த மாடவீடுகளை உடையதுமான திருவையாறு ஆகும்.

கு-ரை: நான்கடிகளிலுமுள்ள மதி என்ற சொல் சந்திரனையே குறிப்பதாகும். வடம் - மாலை. மதி ஒன்ற உதைத்தது, தக்கயாகத்தில் தம் திருவடியால் தேய்த்ததை.

3. பொ-ரை: கொக்கிறகு என்னும் மலரோடு வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடையவர்க்கு உரிய இடம், எண் திசைகளிலும் வாழும் தேவர்களால் வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.

கு-ரை: கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ; கொக்கினது இறகுமாம். வன்னி - வன்னியிலை. திக்கின் இசை தேவர் - எட்டுத்திக்கிலும் பொருந்தியிருக்கின்ற தேவர்கள். அக்கு - சங்குமணி.

4. பொ-ரை: சிறகுகளோடு கூடிய முப்புரங்களும் அழியச் சினந்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப் புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு ஆகும்.

கு-ரை: சிறைகொண்டபுரம் - சிறகோடு கூடிய முப்புரங்கள். கறைகொண்டவர் - கோபித்தவர். மறைகொண்ட நல் வானவர் -