| 
 இப்பதிப்பு அழகாக
வெளிவர ஒப்புநோக்குதல் முதலிய காரியங்களில் முயற்சியுடன்
ஒத்துழைத்த
புலவர் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்,
வித்துவான் எம். ஆறுமுக தேசிகர், வித்துவான்
வி.எஸ். குருசாமி தேசிகர், வித்துவான்
எஸ்.திருஞானசம்பந்தன் இவர்கட்கும் என் நன்றி
உரித்தாகுக. இவ்வெளியீட்டிற்கு வேண்டிய
சீகாழி,
 திருவையாறு படங்களைத்தந்த ஆனந்தவிகடன் காரியாலயத்திற்கு
நன்றி. கல்வெட்டுக் குறிப்புக்களில் சிலவற்றைத்
தொகுக்க வழிகாட்டி உதவிசெய்த அண்ணாமலைப் பல்கலைக்கழக
ஆராய்ச்சி விரிவுரையாளர் தி.வி. சதாசிவ
பண்டாரத்தார் அவர்கட்கு மிக்க நன்றியுடையனாவேன். இங்ஙனம் எல்லாவகையிலும்
இவ்வெளியீடு நன்றாம் வண்ணம் திருவருள்பாலித்த ஸ்ரீ
சொக்கலிங்கப்பெருமான் திருவடிகளை மனமொழிமெய்களால்
என்றும் வணங்குவேன். குற்றங்களைந்து குணம்பெய்து அடியேனை
ஆசீர்வதிக்கச் செந்தமிழ்ப் பேரறிஞர்களை வேண்டிக்கொள்கிறேன். பிறவிஎனும் பொல்லாப்
    பெருங்கடலை நீந்தத்துறவியெனுந் தோற்றோணி
    கண்டீர் - நிறையுலகில்
 பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
 தன்மாலை ஞானத் தமிழ்.
 
  
    | தருமபுரம் 3-4-1953
 | வித்துவான் ச.
      தண்டபாணி தேசிகர்துணைத்தலைவர்
 தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரி
 |  |