பக்கம் எண் :

 42. திருப்பேணுபெருந்துறை575


42. திருப்பேணுபெருந்துறை

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தப்பிள்ளையார், திருவீழிமிழலையில் எழுந்தருளி யிருக்கின்ற காலத்து, பெருகுபுனல் சூழ்ந்த திருப்பேணு பெருந்துறையை வழிபடத் திருவுளங் கொண்டார்கள். அங்ஙனம் சென்று வழிபட்டகாலத்துப் ‘பைம்மாநாகம் ’ என்னும் இத்திருப்பதிகத்தை யருளிச்செய்தார்கள்.

பண் : தக்கராகம்

பதிக எண்: 42

திருச்சிற்றம்பலம்

448. பைம்மா நாகம் பன்மலர் கொன்றை

பன்றிவெண் கொம்பொன்று பூண்டு

செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்

செய்தொழில் பேணியோர் செல்வர்

அம்மா னோக்கிய வந்தளிர் மேனி

யரிவை யோர் பாக மமர்ந்த

பெம்மா னல்கிய தொல்புக ழாளர்

பேணுபெ ருந்துறை யாரே. 1

__________________________________________________

1. பொ-ரை: திருப்பேணு பெருந்துறை இறைவர், படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று ‘ஐயம் இடுக’ என்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர்.

கு - ரை : இது உடம்பெடுத்த பிறவியின் பயனாக, செய்ய வேண்டிய தொழில்களைத் தவறாதுசெய்யும் அடியார்களுக்கு, ஓர் செல்வம் போன்றவர் பேணுபெருந்துறையார் என்கின்றது. பை - படம். பல்மலர் - தும்பை மத்தம் முதலாயின. செம்மாந்து - இறுமாந்து. ஐயம்பெய்க என்று சொல்லி - பிச்சையிடுக என்று கூறி. பிச்சையிடுக