| 
 43. திருக்கற்குடி பதிக வரலாறு: திருப்பராய்த்துறையை வழிபட்டு வந்தருள்கின்ற
காழிப் பிள்ளையார், திருக்கற்குடி மலையை அடைந்தார்கள்.
அம்மலைமேல் எழுந்தருளியுள்ள கனகக்கொழுந்தை - திரிபுரம்
எரித்த வீரரை - விடையாளியைப் போற்றி ‘வடந்திகழ்‘
என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்கள். பண் : தக்கராகம் பதிக எண்: 43 திருச்சிற்றம்பலம் 
459. வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் தடந்திரை சேர்புனன் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர் இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாம் கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. 1 __________________________________________________ 1. பொ-ரை: திருக்கற்குடி மாமலையை
விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம்
விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை
மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள்
வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத்துள்ள
சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே
விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்ப துன்பங்களைக்
கடந்தவர். கு-ரை: ஒருமாதை முடியிலும், ஒருமாதைப்
பாகத்திலும் வைத்தும், பிரமசாரியாயிருப்பவர் கற்குடியார்
என்கின்றது. முப்புரி நூலர் என்றது ‘பவன் பிரமசாரியாகும்‘
என்பதை விளக்க. வினையின் நீங்கிய முதல்வனாதலின்,
வினைபற்றி நிகழ்வனவாகிய துன்ப இன்பங்கள்
அவரைப் பாதியா என்பது விளக்கக் ‘கடந்தவர்‘ என்றார். குருவருள்: "துன்பமொடு இன்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் |