| திருத்தொண்டர் புராணம் திருஞானசம்பந்தர் புராணம் இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை ஆளும் அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங் காடாம்என்று தன்மையுடை யவர் மூதூர் மிதிக்க அஞ்சிச் சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்று செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர் செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார். மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம்முன்பு கனவில் வந்(து) ஆலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்(கு) என்றருளிச் செய்ய ஞாலம்இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடுஇடையா மத்தின் இடைத் தொழுது ணர்ந்து வேலையிடம் உணடவர்தங் கருணை போற்றி மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப
    லுற்றார். - சேக்கிழார். |