பக்கம் எண் :

 47. திருச்சிரபுரம்623


இறைபடாத மென்முலையார்

மாளிகை மேலிருந்து

சிறைபடாத பாடலோங்கு

சிரபுர மேயவனே. 7

511. மலையெடுத்த வாளரக்க

னஞ்சவொ ருவிரலால்

நிலையெடுத்த கொள்கையானே

நின்மல னேநினைவார்

துலையெடுத்த சொற்பயில்வார்

மேதகு வீதிதோறுஞ்

சிலையெடுத்த தோளினானே

சிரபுர மேயவனே. 8

மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனே, குன்றாத வேட்கையோடு திரண்ட கை வளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ.

கு-ரை: தேவரீரைக் குறையாக் காதலோடும், பொறுக்கலாற்றாத இன்பத்தோடும் பெரிய பிராட்டி புணர்வதென் என்கின்றது. வேட்கை - பொருளையடையாத காலத்து அதன் கண்ணிகழும் பற்றுள்ளமாதலின் அடைந்தவழி நுகர்ந்தவழிக் குறையுமன்றே அங்ஙனம் குறையாமல் என்பது வலியுறுக்கக் குறைபடாத வேட்கை என்றார். கோல் வளை - திரண்ட வளையல். பொறைபடாத இன்பம் - பொறுக்க முடியாத அளவுகடந்த இன்பம். மெய்ம்மை - தத்துவம். இறைபடாத - சிறிதும் தளராத. சிறை - குற்றம்.

8. பொ-ரை: கயிலை மலையை எடுத்த வாள்வலி உடைய இராவணன் அஞ்சுமாறு கால் விரல் ஒன்றினால் அடர்த்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே, குற்றமற்றவனே, தன்னை நினைவாரும் இருவினையொப்புடன் தோத்திரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தொறும் வாழ விசயனுக்காக வில்லைச் சுமந்த தோளினை உடையவனே! சிரபுரம் மேவியவனே!

கொள்கையனே என்று பாடம் இருக்கலாம். நிலை எடுத்த கொள்கை என்னே என்று பொருள் கொள்ளின் ஏனைய திருப்பாடல்களுடன் ஒக்கும்.