பக்கம் எண் :

710திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


644. மண்ணார் முழுவதிரு மாடவீதி

வயற்காழி ஞானசம் பந்தனல்ல

பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்

பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்

கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்

கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்

விண்ணோ ருலகத்து மேவிவாழும்

விதியதுவே யாகும் வினைமாயுமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங் கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.

கு-ரை: பிறப்பறுக்கப் புறச்சமயத்தார் பொய்ம்மொழிகளைத் தேறவேண்டா - தூங்கானைமாடம் தொழுமின்கள் என்கின்றது. பகடு ஊர் பசி - யானைப்பசி. முகடு - தலையுச்சி, திகழ் தரர்ந்த - விளக்கம் ஒழிந்த. துகள் - குற்றம்.

11. பொ-ரை: மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வரதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.

கு-ரை: சுடர்க்கொழுந்துநாதன் கழலைப்பரவும் பாடல் பத்தும் கருத்துரக் கற்றாரும் கேட்டாரும் தேவராய் வாழ்வர்; வினைகள் மாயும் எனப் பயன் கூறுகின்றது. மண் - மார்ச்சனை.