பக்கம் எண் :

 60. திருத்தோணிபுரம்723


யணிந்த மார்பையுடையவன். அந்தணர்க்கு அடையாள மாலை தாமரை யாதலின் இங்ஙனம் கூறினார். பதிகங்கள்தோறும் கூறப் பெறும் இராவணனை அடர்த்த வரலாறு, புத்தர் சமணர்களைப் பற்றிய குறிப்பு இவைகள் இத்திருப்பதிகத்து இல்லாமை ஊன்றி இன்புறுதற்குரியது. சன்மார்க்க நெறியில் தலைவனும் தலைவியுமாக இறைவனும் ஆன்மாவும் ஈடுபடுகிறபோது காதல்வெள்ளத்து ஆழங்காற்படுகின்றபோது, இறைவனுடைய இன்றியமையாத் தன்மை உள்ளத்தைக் கவர்ந்துநின்றபோது இன்ப உணர்ச்சியன்றி வேறு எதுவும் தோன்றாது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ்

அழிந்துபுவனம் ஒழிந்திடினும்

அழியாத் தோணி புரத்தின்மறை

யவர்கள் குலத்தி னுதித்தரனோ

டம்மை தோன்றி அளித்தவள்ளச்

செழுந்தண் முலைப்பால் குடித்துமுத்தின்

சிவிகை யேறி மதுரையில்போய்ச்

செழியன் பிணியுஞ் சமண்பகையுந்

தேவி துயரும் தீர்த்தருளி

வழிந்து நறுந்தேன் உகுவனபோல்

மதுரங் கனிந்து கடைதுடிக்க

வடித்துத் தெளிந்த செந்தமிழ்த்தே

வாரப் பாடல் சிவன்கேட்க

மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்

முகனே முத்தம் தருகவே

முத்துக் குமரா திருமலையின்

முருகா முத்தம் தருகவே.

- மகாவித்துவான் கவிராச பண்டாரத்தையா.