| 
 
689. கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலர்வூர்க் கவுணி நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க் கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே. 12 திருச்சிற்றம்பலம் __________________________________________________ அவன் செய்த பூசையால். கொட்டு ஆறு உடுத்த
- மயிர்ச்சாந்து போன்ற மணத்தையும், நல்லொழுக்கத்தையும்
பொருந்தச்செய்த. உடுத்த கொச்சை எனக் கூட்டுக.
இது கொச்சைவயம் என்றதன் காரணம் உணர்த்தியவாறு. 12.   பொ-ரை: வாயில்களிற் பொருந்திய
கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த
கழுமலம் என்னும் சீகாழிப் பதியில் கவுணியர் குலத்தில்
தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய
மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்
பாடிய பல் பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை
ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும்
வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள்
அமரருலகினை ஆள்வர். கு-ரை: மேற்கூறிய கழுமலநகரின் பெயராகக்
கூறிய பத்தையும் வல்லார்க்கு இவ்வுலகில் தீவினைபொருந்தா;
தேவர் உலகினையும் ஆள்வர் எனப் பயன்கூறுகிறது. கடை
- வாயில். கவுணி - கவுணிய கோத்திரத்து உதித்தவர்.
பல்பெயர்ப் பத்தும் - பத்தின் மேலும் பலவாகிய பெயர்.
அமரர் உலகு அமருலகாயிற்று. 
  
    | சீகாழி : பல்பெயர்ப் பதிகங்கள்
       பதிகம்
      63 - எரியார் மழு, 90 - அரனை யுள்குவீர், 117 - காட
      தணிகலங், 127 - பிரமபுரத் துறை, 128 - ஓருரு வாயினை,
      206 - பிரமனூர், 209 - விளங்கிசீர், 210 - பூமகனூர்,
      325 - சுரருலகு, 368 - வரமதே கொளா, 371 - உற்றுமை சேர்வது. |  |