691. மருவார்மதின்மூன் றொன்றவெய்து
மாமலையான் மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த
வும்பர்பிரா னவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக்
கழன்மன்னர் காத்தளித்த
திருவான்மலிந்த சேடர்வாழுந்
தென்றிருப் பூவணமே. 2
692. போரார்மதமா வுரிவைபோர்த்துப்
பொடியணி மேனியனாய்க்
காரார்கடலி னஞ்சமுண்ட
கண்ணுதல் விண்ணவனூர்
__________________________________________________
பூவணமே‘ என்ற தொடரால் மூவேந்தரும்
பூவணத்தில் ஒருங்கு வணங்கிய குறிப்பு இப்பாடலில்
அமைந்துள்ளமையை, கண்டு மகிழலாம்.
2. பொ-ரை: பகைவர்களாகிய திரிபுர
அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும்,
மலையரையன் மகளாகிய பார்வதி தேவியை ஒருபால்
கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய
சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள்
கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக் கழல் புனைந்த
மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வ வளத்தால்
சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.
கு-ரை: திரிபுரம் எரித்துத் தேவியை
ஒருபாகம் வைத்தவனூர் இது என்கின்றது. மருவார் -
பகைவர். உம்பர்பிரான் - தேவதேவன். கருவார் சாலி
- கருக்கொண்ட நெல். ஆலை - கரும்பு. திரு - செல்வம்.
சேடர் - பெருமையுடையவர்.
3. பொ-ரை: போர்ப் பயிற்சியுடைய
மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப்
போர்த்து, திருநீற்றுப் பொடி அணிந்த மேனியனாய்,
கருநிறம் பொருந்திய கடலிடைத் தோன்றிய நஞ்சினை
உண்டவனாய், நுதல் விழி உடையவனாய் விளங்கும் சிவனது
ஊர், நிலவுலகை வளம் செய்வதற்கு வந்த வையையாறு
வாய்க்கால் வழியே பரப்பிப்
|