| 
 
    736. முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன் தென்னீருருவ மழியத்திருக்கண் சிவந்த நுதலினார் மன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டு கன்னீர்வரைமே லிரைமுன்றேடுங் கயிலை மலையாரே. 4 737. ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர் கழல்சேர்வார் நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும் __________________________________________________ நினைந்து போற்றும் தேவர்களின் தேவர்.
முத்தலைச் சூலத்தை உடையவர். கு-ரை: இதுவும் அது. மங்கை வெருவ
மாவின் உரிவை மூடி - உமாதேவியார் அஞ்ச யானைத்தோலைப்
போர்த்து. கழல் உன்னும் - திருவடியைத் தியானிக்கின்ற.
திரங்கல் முகவன் - குரங்குகள். 4.  பொ-ரை: இயற்கையாகத் தோன்றிய
மலைக் குகைகளில் வாழும் புலிகள், பசியினால் சினமடைந்து
கல்லால் இயன்ற மலை மிசை உணவாதற்குரிய
இரைகளையும், அருந்துவதற்கு நிலைபெற்ற நீரையுடைய
மடுக்களையும் தேடும் கயிலை மலையில் உறையும்
தலைவர், கடலில் பரவித் தோன்றிய நஞ்சினைத் திரட்டி
உண்டவர் மன்மதனின் அழகிய உருவம் அழியக் கண் சிவந்த
நுதலை உடையவர். கு-ரை: தென் நீர் உருவம் - அழகிய
நீர்மையோடு கூடிய வடிவம். சிவந்த - கோபத்தாற் சிவந்த.
மன்னீர் மடு - நிலைபெற்ற நீரினையுடைய சுனை, கல்லறை
- குகை. உழுவை - புலி. 5.  பொ-ரை: இரவில் சிதறித் தனிமைப்பட்ட
யானைகள் குளிர்ந்த மலைச் சாரலின் வழிகளில்
விரையச் சென்று கன்றும் பிடியுமாய் இணையும் கயிலை
மலைக்குரிய இறைவர். ஒருவராக இருந்தே |