பக்கம் எண் :

806திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)

சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.

கு-ரை: சம்பந்தன் சொன்ன ஈங்கோய்மலைப் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவார் என்கின்றது. வேணுபுரம் என்பது சீகாழிக்கு மறுபெயர். எழில் - அழகு.

திருஞானசம்பந்தர் புராணம்

செங்கட் குறவரைத் தேவர் போற்றும்

திகழ்திரு ஈங்கோய் மலையில் மேவும்,

கங்கைச் சடையார் கழல்ப ணிந்து கலந்த

இசைப்பதி கம்பு னைந்து,

பொங்கர்ப் பொழில்சூழ் மலையும் மற்றும்

புறத்துள்ள தானங்க ளெல்லாம் போற்றிக்,

கொங்கிற் குடபுலஞ் சென்ற ணைந்தார்

கோதில்மெய்ஞ் ஞானக் கொழுந்த னையார்.

- சேக்கிழார்.

திருஈங்கோய்மலை எழுபது

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்
இன்ன தெனஅறியா ஈங்கோயே ஓங்கார
மன்னதென நின்றான் மலை.

அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.

- நக்கீர தேவர்.