766. பொங்கார்சடையர் புனலரனலர்
பூதம் பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த்
தனியோர் விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ்
சூடிக் குளிர்பொய்கைச்
செங்காலனமும் பெடையுஞ்சேருஞ்
சித்தீச் சரத்தாரே. 2
767. முடிகொள்சடையர் முளைவெண்மதியர்
மூவா மேனிமேல்
பொடிகொணூலர் புலியினதளர்
புரிபுன் சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற்
கயலா ரினம்பாயக்
கொடிகொண்மாடக் குழாமார்நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே. 3
__________________________________________________
2. பொ-ரை: தழைத்த சடையினராய்,
கங்கை அணிந்தவராய், அனல் ஏந்தியவராய், பூதகணங்கள்
பாடத் தம் காதலியாகிய உமையம்மையும் தாமும் உடனாய்,
ஒப்பற்றதொரு விடைமீது, தேன்பொருந்திய கொன்றை
மலர், வன்னியிலை, ஊமத்தை மலர் ஆகியவற்றைச்
சூடிக் கொண்டு குளிர்ந்த பொய்கைகளில் சிவந்த
கால்களை உடைய ஆண் அன்னமும் பெண் அன்னமும் கூடிக்
களிக்கும் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.
கு-ரை: இதுவும் அவர் புனலர், அனலர்,
விடையேறியவர் என்கின்றது. பொங்கு - வளர்ச்சி.
கொங்கு - தேன். இறைவன் தம் காதலியும் தானும் விடையேறியிருப்பதால்,
பொய்கைகளில் அன்னங்களும் பெடையோடு சேர்ந்திருக்கின்றன
என்று போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தை
நல்கும் தன்மை விளக்கியவாறு.
3. பொ-ரை: முடியாகச் சடையினை
உடையவராய், ஒரு கலையோடு தோன்றும் வெண்மையான மதியை
அணிந்தவராய், மூப்படையாத தம் திருமேனியின்மேல்
திருநீற்றையும் முப்புரி நூலையும் அணிந்தவராய்,
புலித்தோலை உடுத்தவராய், முறுக்கப்பட்ட சடைகள்
|