| 
 
      கன்றுண்பயப்பா லுண்ணமுலையிற் கபால மயல்பொழியச் சென்றுண்டார்ந்து சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 10 775. குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை செயிலார் பொய்கை சேருநறையூர்ச் சித்தரச் சரத்தாரை மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன் பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே. 11 திருச்சிற்றம்பலம் __________________________________________________ எளிதில் அருள் நல்கும் சிவபிரான், கன்று
விருப்போடு உண்ண, முலைக் காம்பில் சுரந்த பால்
பாத்திரத்தில் நிறைந்து அயலினும் பொழிவதைக்
கண்டு பால் போதுமென மீண்டும் கன்றை அவிழ்த்துவிட
அக் கன்றுகள் சென்று உண்டு கொட்டிலை அடையும்
நறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார்.
சென்று தொழுமின். கு-ரை: ஒன்றுமறியாத புத்தர் சமணர்களின்
உரைகளைக் கேட்டுழலும் மக்களே! இத்தலத்தைச்
சேரும் என்கின்றது. கன்று உண்பயப்பால் உண்ண - கன்று
உண்ணும் விருப்பால் உண்ண. முலையில் - முலையிலிருந்து.
கபாலம் அயல் பொழிய - கறவைப் பாத்திரம் நிறைந்து
வழிய. சென்று உண்டு ஆர்ந்து சேரும் - மீளவும் கன்றுபோய்
உண்டு நிறைந்து சேரும் என்க. 11.  பொ-ரை: குயில்கள் வாழும் அழகிய
மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில்
நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச்
சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள்
சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்
பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப்பாடிய இப்பதிகப்
பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம். கு-ரை: இப்பாடல் பாடுவார்க்குப்
பாவம் நாசம் ஆம் என்கின்றது. மாதவி - குருக்கத்தி.
செயில் - வயலில் இப்பாடல் பயில்வார்க்கு இனிமையாய்
இருக்குமென்று இதன் இயல்பு விளக்கியவாறு. |