| 
 
810. பெண்ணினைப்பாக
மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப் பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந்
தெடுப்பமற்றுயர்ந்து விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 2 811. ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன்
காதல்செய்பெருமான் நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த் தாதுகண்
மூசவிண்டுதிர்ந்து வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 3 ____________________________________________________ 2.  பொ-ரை: உமையம்மையை
இடப்பாகமாக விரும்பி ஏற்று செஞ்டைமேல் பிறை
பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப்
பாடி ஆடியவராய்ச் சென்று, மகளிரிடம் பலியேற்கும்
பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை
மூடி வான்முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல்
நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி
மீளநிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய
வெங்கரு என்னும் சீகாழிப் பதியுள்,
வீற்றிருந்தருள்கிறார். கு-ரை: கடல்கொண்டஞான்று
உயர்ந்தோங்கிய கோயிலில் உமாதேவியை
ஒருபாகத்திருத்தி, பிறைசூடி, பண்ணைப்பாடி, தன்
தன்மைகளைப் பேணி வீற்றிருந்தார் என்கின்றது.
அமர்ந்து - விரும்பி பரிசுகள் பேணி - தன்
தன்மையவாகிய கருணையைக் காட்டி, கடல் மோதி, ஏறி,
முகந்து எடுப்ப, உயர்ந்து, ஓங்கி, இழி கோயிலாகிய
வெங்குருவில் வீற்றிருந்தார் என முடிக்க. 3.  பொ-ரை: தம்இயல்பிற்குப்
பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர்
உருத்தாங்கி வந்து உமையம்மை காண அருச்சுனனோடு ஒரு
காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு |