பாருளார்பாடலோ டாடலறாத
பண்முரன்றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார்பைம்பொழி
லிலம்பையங்கோட்டூ
ரிருக்கையாப்பேணியென்
னெழில்கொள்வதியல்பே. 7
827, வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை
வேந்தனதடக்கைக ளடர்த்தவனுலகில்
ஆருலாமெனதுரை தனதுரையாக
வாகமோரரவணிந் துழிதருமண்ணல்
வாருலாநல்லன மாக்களுஞ்சார
வாரணமுழிதரு மல்லலங்கானல்
ஏருலாம்பொழிலணி யிலம்பையங்கோட்டூ
ரிருக்கையாப்பேணியென்
னெழில்கொள்வதியல்பே. 8
___________________________________________________
வணங்கும் ஊர்களை இடமாகக்
கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக
வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை
உகந்து ஏறி வருபவன். அத்தகையோன். மண்ணக
மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும்,
அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி
செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான
இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக்
கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ?
கு-ரை: நீர். தீ, ஆகாயம்,
நினைப்பவர் மனம், ஊர் இவை இறைவன் வசிக்கும்
இடங்கள்; இங்கெல்லாம் உள்ளவன் விடையேறி
இவ்வூரை இருக்கையாக்கொண்டு என் எழில்
கொள்வதியல்பா என்கின்றாள். அந்தரம் -
ஆகாயம். நித்தமா ஏத்தும் - நித்தியவழிபாடு
செய்யும். மண்ணவர் பாட்டும் ஆட்டும் இடையறாத
பொழில். முரன்று வண்டினம் பாடும் பொழில் எனக்
கூட்டுக.
8. பொ-ரை: நிலத்தின் வேர் வரை
உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற
இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்ட கைகள்
இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து
விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக
வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில்
பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலைவன்.
அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல
வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான
காடுகளும் அழகிய
|