| 
 
    881. வாசங் கமழ்காழி மதிசெஞ்
    சடைவைத்தஈசன் னகர்தன்னை யிணையில்
    சம்பந்தன்
 பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ
    ருலகத்துப்
 பாசந் தனையற்றுப் பழியில்
    புகழாரே. 11
 திருச்சிற்றம்பலம் ____________________________________________________ 11.  பொ-ரை: பிறைமதியைச்
செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற
சீகாழிப் பதியாகிய நகரை, ஒப்பற்ற
ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய
இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல்
சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற
புகழோடு வாழ்வர். கு-ரை: காழிநகரைப் பற்றிச்
சம்பந்தன் சொன்ன இத்தமிழை வல்லவர்கள் கடல்
புடைசூழ்ந்த உலகத்துப் பாசம் நீங்கிப்
பழியற்றுப் புகழுடையராய் வாழ்வர் எனப் பயன்
கூறுகிறது. பெருநீர் - கடல். 
  
  
    
      | திருப்புகழ் 
          
            | சமயபத்தி
      விருதாத்தனை  சரணபத்ம
      சிவார்ச்சனை  அமையசற்குரு சாத்திர  அருளெனக் கினிமேற்றுணை 
      உமைமுலைத் தருபாற்கொடு  உரியமெய்த்
      தவமாக்கிநல் தமிழ்தனைக்கரை
      காட்டிய சமணரைக்கழு வேற்றிய | நினையாதே தனைநாடி
 மொழிநூலால்
 தருவாயே
 அருள்கூறி
 உபதேசத்
 திறலோனே
 பெருமாளே.
 |   - அருணகிரி நாதர். நால்வர் நான்மணி மாலை இலைபடர்ந்த
      பொய்கை யிடத்தழுதல் கண்டுமுலைசுரந்த வன்னையோ முன்னின் - னிலைவிளம்பக்
 கொங்கை
      சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா
 விங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.
  - சிவப்பிரகாச சுவாமிகள். |  |