| 
 வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை,
கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த
தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய கலை நலம்
வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள்
நீங்கப் பெறுவர். கு-ரை: நல்ல நகரானை ஞானசம்பந்தன்
சொன்ன கலைகளாகிய இவைகளை வல்லவர்கள் கவலை கழிவார்
என்கின்றது. கொச்சை - சீகாழி. இப்பதிகத்தைக்
கலைகள் எனச் சிறப்பித்தமை காண்க. 
  
  
    
      | திருஞானசம்பந்தர்
        புராணம் நிலவு
        மாளிகைத் திருநல்லம் நீடுமா மணியைஇலகு சேவடி இறைஞ்சிஇன் தமிழ்கொடு துதித்துப்
 பலவும் ஈசர்தம் திருப்பதி பணிந்துசெல் பவர்தாம்
 அலைபு னல்திரு வழுந்தூர்மா டக்கோயில் அடைந்தார்.
 
      - சேக்கிழார். நால்வர்நான்மணிமாலை இடுகாட்டுண்
      மாத ரெலும்பிற் புரண்மால்சுடுகாட்டு ளாடுவாற்
      சுட்டி - னொடுகாட்டுஞ்
 சம்பந்தா வென்புநின்பால் தந்தாக்கிக் கொண்டிலனென்
 கும்பந்தா மென்னுமுலைக்
      கொம்பு.
  - சிவப்பிரகாச சுவாமிகள். |  |