931. கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லு நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
சொல்லு மடியார்க ளறியார் துக்கமே. 6
932. எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.
7
933. காம னெழில்வாட்டிக் கடல்சூ ழிலங்கைக்கோன்
நாம மிறுத்தானை நல்லூர்ப் பெருமானை
____________________________________________________
6. பொ-ரை: தன்னைக் கொல்ல வந்த
மதம் பொருந்திய யானையை, உமையம்மை அஞ்சுமாறு
கொன்று, அதன் தோலைப் போர்த்த நல்ல நெறியாளனாய்,
நல்லூர்ப் பெருமானாய், எல்லோரும் அடையத்தக்க முத்திநெறியாளனாய்
விளங்கும் சிவபிரானை அடைந்து, தங்களது அரிய துன்பங்கள்
தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள், துக்கம்
அறியார்.
கு-ரை: மக்களடையும் நெறியாகவுள்ள
நல்லூர்ப் பெருமானைச் சொல்லும் அடியார்கள்துக்கம்
அறியார் என்கின்றது. உரி தோல். செல்லுநெறி -
அடையத்தகும் நெறியாகிய முத்தி. சேர்ந்தார் - தியானித்தவர்கள்.
7. பொ-ரை: எங்கள் தலைவனும், தேவர்களால்
தொழுது போற்றப்படும் நம் பெருமானும், நல்லூரில்
பிரிவின்றி எழுந்தருளியிருக்கும் தலைவனுமாய
இறைவனை அடைந்து, தம் கைகளை உச்சி மேல் குவித்து,
நாங்கள் உனக்கு அடிமை என்று கூறி, அவனது திருவடி நீழலில்
ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் இலராவர்.
கு-ரை: சிரமேற் கைகுவித்து, திருமுன்நின்று
‘அடியேன்மீளா ஆளாவேன்’ என்று திருவடி நீழலில் தங்கும்
மனத்தார்கள் தடுமாற்றம் அறுப்பார்கள் என்கின்றது.
8. பொ-ரை: மன்மதனது உருவ அழகை அழித்துக்
கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணனது
புகழைக் கெடுத்து, விளங்கும் நல்லூரில் எழுந்தருளிய
பெருமானை, பாதுகாப்புக் கொண்ட மனத்
|