பக்கம் எண் :

920திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


936. தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைக லேத்துவார்
விண்ணுந் நிலனுமாய் விளங்கும் புகழாரே 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.

கு-ரை: அமணரும் புத்தரும் அலர் தூற்ற நின்ற பெருமானைப் புகழும் அடியார்கட்கு இடர் இல்லை என்கின்றது. பிச்சக்குடை - மயிற் பீலியாலாகிய குடை. நிச்சம் - நாடோறும். அலர் - பழிச் சொல். நச்சு மிடற்றானை - விஷம்பொருந்திய கழுத்தையுடையவனை. எச்சும் - ஏச்சும். ஏத்தும் என்பதன் மரூஉ.

11. பொ-ரை: குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்,பொருந்திய நீரை வேலியாக உடைய நல்லூரில் விளங்கும் பெருமான் இயல்புகளைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவார்.

கு-ரை: ஞானசம்பந்தன், நல்லூர்ப்பெருமானைச் சொன்ன புகழ்மாலையை நாளும் ஏத்துவார் விண்ணும் நிலனுமாக விளங்கும் புகழார் என்கின்றது. தண்ணம்புனல்: அம் சாரியை. புனல் வேலி - நீரை வேலியாகவுடைய. வண்ணம்புனை மாலை - இறையியல்புகளை எடுத்துச் சேர்த்துச் சொன்ன மாலை. வைகல் - நாடோறும்.

திருஞானசம்பந்தர் புராணம்

வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினிற் பெருகுநீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமேல் ஏறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.

- சேக்கிழார்.