1010. பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 8
1011. இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 9
1012. தேர ரமணரும், சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை, நீர்நின்றுள்குமே. 10
1013. நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்று முரைவல்லார், என்று முயர்வோரே. 11
திருச்சிற்றம்பலம்
___________________________________________________
கு-ரை: இடையாது - இடையீடு படாது. உலகம்
உடையார் - சக்கரவர்த்தியாவர்.
8. பொ-ரை: பத்துத்தலைகளை உடைய இராவணனை
அவன் கதறி அழுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத்
தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.
கு-ரை: மொய்த்து - நெருங்கி.
9. பொ-ரை: திருமால் பிரமர்களாகிய
இருவரும் அறியவொண்ணாத திருமுதுகுன்றத்தில்
விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர்
பெருக்கத்தோடு வாழ்வர்.
கு-ரை: இருவர் - அயனும் மாலும்.
10. பொ-ரை: புத்தர் சமணர் ஆகியோர்க்குத்
தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத
சிவபெருமானுடைய திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின்
நீர் நின்று உள்குவீராக.
கு-ரை: உள்கும் - தியானியுங்கள்.
11. பொ-ரை: திருமுதுகுன்றம் சென்று நின்று
பெருமை உடையவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த
இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும்
உயர்வு பெறுவர்.
கு-ரை: ஒன்றும் உரை - அவன் தான் என வேறின்றி
ஒன்றிய உரை.
|