| 
 
    1016. ஆல நீழலார், ஆல வாயிலார்கால காலனார், பால தாமினே. 3
 1017. அந்த மில்புகழ், எந்தை யாலவாய்பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 4
 1018. ஆட லேற்றினான், கூட லாலவாய்பாடி யேமனம், நாடி வாழ்மினே. 5
 1019. அண்ண லாலவாய், நண்ணி னான்றனைஎண்ணி யேதொழத், திண்ண மின்பமே. 6
 ___________________________________________________ 3. பொ-ரை: கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும்,
காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய
பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக. கு-ரை: ஆலநீழலார் - வடவால விருட்சத்தின்
நிழலில் இருப்பவர். 4. பொ-ரை: ஆலவாய்க் கோயிலிலுள்ள
எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு
இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள். கு-ரை: அந்தமில்புகழ் - எல்லையற்ற
புகழ். பந்தியார் - இடமாகக்கொண்டவர்; பாசங்களால்
கட்டுண்ணாதவர் என்றுமாம். 5. பொ-ரை: வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது
நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி
மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக. கு-ரை: ஆடல் ஏறு - வெற்றியோடு கூடிய
இடபம். நாடி - விரும்பி. 6. பொ-ரை: தலைமையாளனும் ஆலவாய் என்னும்
மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய
சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின்
இன்பம் பெறுவது திண்ணமாகும். கு-ரை: எண்ணி - தியானித்து. திண்ணம்
- உறுதி. |