| 
 
1081. அங்கமொராறும் மருமறைநான்கும் மருள்செய்து பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத் திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 2 1082. நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மே னிரைகொன்றை சீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ் சேய்தாய ஓருடம்புள்ளே யுமையொருபாக முடனாகிப் பாரிடம்பாட வினிதுறைகோயில் பரங்குன்றே. 3 ___________________________________________________ நகரம் திருப்பரங்குன்றம் என்கின்றது.
சூடலன் - சூடுதலையுடையவன். அம் சொல் அணியிழையாளை
எனப் பிரிக்க. 2. பொ-ரை: நான்கு வேதங்களையும் ஆறு
அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த
மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற
அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும்
சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச்
சிவபிரான் விளங்கும் நன்னகர்
திருப்பரங்குன்றம். கு-ரை: வேதம் அங்கம் இவைகளை
யருளிச் செய்து, பூணுநூல் நீறணிந்த மார்பில்
விளங்க, பாம்பும் மதியும் சென்னியிற் சூடிய
உமையொருபாகன் நகர் இது என்கின்றது. பொங்கும்
வெண்ணூல் - அழகுமிகும் பூணுநூல். 3. பொ-ரை: கங்கை சூடிய நிமிர்ந்த
சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை
மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக
உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக் |