| 
 
1092. கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயன்மண்டிக் கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. 2 1093. பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் னிடமென்பர் கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக் கல்லியலிஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 3 ___________________________________________________ 2. பொ-ரை: மணம் பொருந்திய
சந்தனம், கரிய அகில், குளிர்ந்த ஒளி பொருந்திய
முத்து ஆகியன பொருந்தியதாய் வரும் தெளிந்த
நீரையுடைய மண்ணியாற்றால் வளம்பெறும்
வயல்களால் சூழப் பட்டு, கொத்துக்களாக விரிந்த
மலர்களை உடைய சோலைகளில் குயில்கள் ஆடச்
செவிகளைக் குளிர்விக்கும் வண்டுகள் செவ்வழிப்
பண் பாடும் சீரோடு திகழ்வது, சிவபிரானது
திருக்கண்ணார் கோயிலாகும். கு-ரை: மண்ணியாறு வளம்படுக்கின்ற
வயல்கள் நிறைந்து சோலையிலே குயில் ஆட
வண்டுபாடுங் கண்ணார்கோயில் இது என்கின்றது.
கந்து அமர் சந்து - மணம் பொருந்திய சந்தனம்.
கந்து - கந்தம். கார் அகில் - வயிரமாய் இருக்கும்
கறுத்த அகில். கோகிலம் - குயில். செந்நிசை -
செவ்வழிப்பண். 3. பொ-ரை: பலவாக இயலும் தாளங்களை
இசைத்துப் பூதகணங்கள் ஏத்த, பிணங்கள் இடப்படும்
சுடுகாட்டில் நள்ளிராப்போதில் திருநடம்புரியும்
ஈசனாகிய எம்பெருமானது இடம், காடுகளில் முல்லையும்,
மல்லிகையும் காட்டு மல்லிகையோடு பின்னி
விளங்்குவதும், |