|
என்னும் தொடக்கமுள்ள
மெய்க்கீ்ர்த்தியை உடைய இராஜகேசரி
திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன் முதலானோர்
காலங்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர்,
திருவாமாத்தூர் உடைய பெருமானடிகள், திருவாமாத்தூர் ஆள்வார்,
திருவாமாத்தூர் ஆளுடையார் அழகியதேவர், திருவாமாத்தூர் உடைய
பரமசுவாமி என்னும் பெயர்களால் குறிக்கப்படுகின்றார்1.
இத்திருக்கோயில்,
கோப்பரகேசரி வர்மனது ஆட்சியாண்டில்
கற்றளியாகக் கட்டப்பட்டது. இத்தளியைச் செய்தவன் அருகூர்த்தச்சன்
நாராயணன் வேற்கந்தனாகிய திருவாமாத்தூர் ஆசாரியன் ஆவன்.
திருச்சுற்று மண்டபத்தைக் கட்டியவன் செம்பியன் காத்திமானடிகள்
ஆவன். கோப்பரகேசரி வர்மன் கல்வெட்டில் இவ்வூர், அருவாநாட்டு
மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும்,
கோப்பரகேசரி வன்மரான இராசேந்திர சோழதேவன் அல்லது
கங்கைகொண்ட சோழன் கல்வெட்டில், ஜயங்கொண்ட சோழ
மண்டலத்துப் பனையூர்நாட்டு, வாவலூர் நாட்டுத் தேவதானம்
திருவாமாத்தூர் எனவும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில்
கங்கைகொண்ட சோழவளநாட்டுப் பனையூர் நாட்டுத் தேவதானம்
திருவாமாத்தூர் எனவும், பூமேவுவளர் திருப்பொன் மார்வுபுணர
என்று தொடங்கும் மெய்க்கீ்ர்த்தியையுடைய இராசகேசரி, திருபுவனச்
சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவர் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப்
பனையூர்நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும்,
வழங்கப்பட்டிருந்தது.
இக்கல்வெட்டுக்களினால்
திருநுந்தாவிளக்கு எரிப்பதற்குத் துலைநிறை
செம்பொன், ஆடுகள் இவைகளையும் திருச்சந்திக்குத் திருச்சந்தனம், சீதாரி
இவைகளுக்குப் பொன்னும், திருப்பதிகம் பாடுவதற்கு நிலநிவந்தமும்
அளிக்கப்பெற்ற செய்திகள் புலப்படுகின்றன.
இத்திருக்கோயிலில்,
மூன்று சந்திகளிலும், திருப்பதிகம் பாடி
வருவதற்குக் குருடர்கள் பதினாறுபேர்களும், அவர்களுக்குக் கண்
1See
the Annual Reports on South Indian Epigraphy for
the year 1903, No. 402-435; year 1922, No. 1-71.
See
also the South Indian Inscriptions, Volume VIII, No.
718-751. (South Arcot District, Vilupuram Taluk)
|