பக்கம் எண் :

112

குறிக்கப்பெற்றுள்ளன.

     அவைகளாவன:- திருவடிப்போது நாறிய திருவீதி, ராஜராஜன்
திருவீதி, குலோத்துங்கன் திருவீதி என்பனவாகும்.

                 12. திரு ஆலவாய்

     இது மதுரைக்கு உரிய வேறு பெயராகும். வம்மிசசேகர பாண்டியன்
ஆட்சிசெய்து வருங்காலத்தில் மக்கள் வசிப்பதற்கு இடம் போதாமையால்,
ஆதியில் இந்நகரத்திற்கு ஏற்பட்ட எல்லையைக் காட்டியருளுமாறு அவன்
சிவபெருமானை வேண்டினான். பெருமானும் தனது திருக்கையில்
கங்கணமாயுள்ள பாம்பை அளந்து காட்டுமாறு பணிக்க, அது வாலும்
வாயும் ஒன்றுபடும்படி வட்டமாக வளைத்துக் காட்டியமையால் இப்பெயர்
பெற்றது.

     இதற்குரிய வேறுபெயர்கள் நான்மாடக்கூடல், மதுரை, கடம்பவனம்,
பூலோக கயிலாயம், சிவராசதானி, துவாதசாந்தத் தலம் என்பன.

     மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 3/4. கி.மீ.,
தூரத்தில், வையையாற்றின் தென்கரையில் இருக்கிறது. தமிழகத்துப்
பெருநகர்கள் பலவற்றிலிருந்தும் பேருந்துகளில் மதுரை செல்லலாம்.
பாண்டியநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்கள் பதினான்கில் முதன்மை
பெற்றது.

     இறைவரின் திருப்பெயர் சொக்கலிங்கப்பெருமான். இறைவியாரின்
திருப்பெயர் அங்கயற்கண்ணி. இத்திருப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தில்
திருஞானசம்பந்தப் பெருந்தகையார் “அங்கயற் கண்ணி தன்னொடு
மமர்ந்த ஆலவாயாவது மிதுவே” என எடுத்தாண்டிருப்பது மகிழ்தற்குரியது.
வடமொழியில் மீனாட்சிதேவி என்பர்.

     தலவிருட்சம் கடம்பு.

     தீர்த்தம் பொற்றாமரை, வையை ஆறு, எழுகடல்.

     ‘பாண்டிநாடே பழம்பதி’ என்று சிறப்பித்து ஓதப்பெறும் மதுரை,
பாண்டிநாட்டில் பாண்டிய மன்னர்களுக்குத் தலைநகராக விளங்குவது
மதுரை. புலமைமிக்க புலவர் பெருமக்கள் பலர் இருந்து