|
இனமலிந்து
இசைபாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே
எனவும் உரைத்தருள்கிறார்.
ஞானசம்பந்தர்
தாம் அருளிய திருப்பதிகங்களை அடியவர்கள் இசை
கூடும் வகையால் ஓதவேண்டும் என்பதையே பல பதிகங்களிலும் வற்புறுத்திக்
கூறியருளுவதைக் காணலாம்.
இசை,
நல்லிசை, மெல்லிசை, வல்லிசை என மூவகைப்படும். அவற்றுள்,
நல்லிசை என்பது பாடலுக்காக இசை என்ற அடிப்படையில் பாட்டின்
பொருளைக் கேட்போர் உளங்கொளத்தக்க வகையில் பாடப்பெறுவதாகும்.
இந்நல்லிசையிலேயே ஞானசம்பந்தர் தேவாரம் அருளிச் செய்துள்ளார்
என்பதைச் சுந்தரர், நல்லிசை ஞானசம்பந்தன் எனக்கூறும் தேவாரத்
தொடராலும் அறியலாம்.
பண்களின்
பயன், இறையருளை மக்கள் உணர்ந்து போற்றத் துணை
புரியவேண்டும், என்பதைச் சேக்கிழார், பண்ணின் பயனாம் நல்லிசையும்
என்ற தொடரால் உணர்த்தி அருள்கிறார்.
பண்ணென்னாம்
பாடற்கு இயைபின்றேல் என்று கூறுவார்
திருவள்ளுவர். அவ்வகையில் பாடற்கு இயைந்த பண்ணோடு பாடி
இறைவனைப் போற்றுவதை அன்பர்கள் கடைப் பிடிக்க வேண்டும்.
நாவின்
பயன் :
திருஅனேகதங்காவதம்
திருப்பதிகத்தில் மூன்றாம் பாடலில்
இறைவனின் திருநாமத்தை நவிலாத நாக்கு, நா என்னும் தகுதியைப்
பெறாது என்று உறுதியாகக் கூறுகிறார்.
நம்பன்
நாமம் நவிலாதன நா எனல் ஆகுமோ?
(தி.2
ப.5 பா.3) |
என்று கேட்கிறார்.
இவ்விடத்து
இளங்கோவடிகள் நாராயணா என்னா நா என்ன நாவே
என்று சிலம்பில் கேட்பதை ஒப்பு நோக்கி உணரலாம்.
இதே
நேக்கில், அங்கமாலை அமைப்பில் ஞானசம்பந்தர்
|